Posts

சூறதுர் ரூம் தொடர்...

30 வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ள இந்த சூறா (சூறா அர் ரூம்),60 வசனங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை உள்ளடக்கத்தின் அடிப்படையில் வசனக் கூட்டங்களாக நோக்குவோம். 1-7  ( ஆயத்துகள்) : விசுவாசிகளுக்கே வெற்றி நிச்சயம் என அல்லாஹ் வழங்கியிருக்கும் வாக்கு. 8-10 : சிந்தனை செய்யும் படி விடுக்கப்படும் அழைப்பு 11- 32 : பிரபஞ்ச அத்தாட்சிகளை குறிப்பிட்டு பின்வரும் 03 அம்சங்களை விளக்குகிறது. - மீள எழுப்பப்படும் நாள் பற்றி வாக்களிப்பதோடு எழுப்பப்படும் நாட்களில் மனிதர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பது பற்றிய விளக்கம் (11-16) - அல்லாஹ்வின் தூய்மை, அவன் புகழ் ஆகியவற்றை பிரபஞ்ச அத்தாட்சிகளுடன் விளக்குகிறது ( 17-29) - இஸ்லாம் மனித இயல்பில் நிலைகொண்டுள்ள மார்க்கம் என்றும் அல்லாஹ் ஒருவனே எனும் ஓரிறைக் கொள்கையை நினைவூட்டி குழுக்களாக, கொள்கைகளாக பிரிந்துவிட வேண்டாம் என்று மனிதர்களுக்கு உபதேசம் வழங்குகிறது. (30-32) 33 - 37 : இன்ப துன்பத்தின் போது மனித இயல்பு எப்படியிருக்கிறது என்பதை கவலையோடு சித்தரிக்கிறது. 38-39 : உரிமைகளை வழங்குமாறு உற்சாகம் வழங்குவதோடு வட்டிக்கொடுப்பனவு முறையையும் தடுத்து உபத...

சூறதுர் ரூம்

சூறா அர் ரூம் : (நம்பிக்கையை சீர் செய்துகொள்!!) உலகத்தின் முகம் மீது விழுந்துள்ள வர்ணமான திரைகள் காரணமாக உலகம் பற்றிய வெளித்த தோற்றப் பார்வையும் உலகம் பற்றிய ஒரு மாயையும் மனிதர்களிடையே ஏற்பட்டுவிடுகிறது. இதனால், அவற்றைத் தாண்டி உண்மை முகத்துடன் திகழும் மறுமை வாழ்வின் தோற்றம் எமது கண்களுக்கு மறைந்து போகின்றன.இருப்பினும் எமது அகப் புலன் அதனை உணரத் தவற வேண்டாம் என சூறா அர் ரூம் போதிக்கிறது. உலகத்தின் அருள்களை அனுபவிக்கும் மனிதன் நன்றி உணர்விழந்து அகம்பாவம்,அத்துமீறல்,மமதை  கொண்டலையும் இயல்புகொண்டவனாகிவிடுகிறான். இவ் இயல்பு கண்டு இந்த சூறா கவலை கொள்கிறது. மனித வாழ்வோடு தொடர்பான சில யதார்த்தங்களை நினைவுகூறி,மனிதனுக்கு ஒரு மிகப்பெரும் உண்மையை இந்த சூறா சொல்கிறது. 1. வெற்றியும் தோல்வியும் சுழலும் சக்கரம் 2. வாழ்வும் மரணமும் 3. மனைவியும் குடும்ப வாழ்வும் 4. மாறுபட்ட மொழிகளும் படைப்புகளின் வர்ண வித்தியாசங்களும் 5. இரவு இமை தூங்கவும் பகல் வாழ்வுக்கான அருள் தேடவும் 6. மின்னலும் மழையும், நீரேந்தி வளரும் புற்களும் வாழும் தாவரங்களும் 7. வானமும் பூமியும் நிலை பெற்று நேர்த்தியோடு ச...