சூறதுர் ரூம் தொடர்...
30 வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ள இந்த சூறா (சூறா அர் ரூம்),60 வசனங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை உள்ளடக்கத்தின் அடிப்படையில் வசனக் கூட்டங்களாக நோக்குவோம்.
1-7 ( ஆயத்துகள்) : விசுவாசிகளுக்கே வெற்றி நிச்சயம் என அல்லாஹ் வழங்கியிருக்கும் வாக்கு.
8-10 : சிந்தனை செய்யும் படி விடுக்கப்படும் அழைப்பு
8-10 : சிந்தனை செய்யும் படி விடுக்கப்படும் அழைப்பு
11- 32 : பிரபஞ்ச அத்தாட்சிகளை குறிப்பிட்டு பின்வரும் 03 அம்சங்களை விளக்குகிறது.
- மீள எழுப்பப்படும் நாள் பற்றி வாக்களிப்பதோடு எழுப்பப்படும் நாட்களில் மனிதர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பது பற்றிய விளக்கம் (11-16)
- அல்லாஹ்வின் தூய்மை, அவன் புகழ் ஆகியவற்றை பிரபஞ்ச அத்தாட்சிகளுடன் விளக்குகிறது ( 17-29)
- இஸ்லாம் மனித இயல்பில் நிலைகொண்டுள்ள மார்க்கம் என்றும் அல்லாஹ் ஒருவனே எனும் ஓரிறைக் கொள்கையை நினைவூட்டி குழுக்களாக, கொள்கைகளாக பிரிந்துவிட வேண்டாம் என்று மனிதர்களுக்கு உபதேசம் வழங்குகிறது. (30-32)
33 - 37 : இன்ப துன்பத்தின் போது மனித இயல்பு எப்படியிருக்கிறது என்பதை கவலையோடு சித்தரிக்கிறது.
38-39 : உரிமைகளை வழங்குமாறு உற்சாகம் வழங்குவதோடு வட்டிக்கொடுப்பனவு முறையையும் தடுத்து உபதேசிக்கிறது.
40-42 : ஓரிறைக்கொள்கையே யதார்த்தமானது என்பதை சில ஆதாரங்களுடன் மீண்டும் வலியுறுத்துகிறது.அத்தோடு மனித செயற்பாடுகள் ஏற்படுத்தும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.
இப் பகுதியில், பொருளாதார ரீதியிலான சிந்தனை இறை நம்பிக்கையோடு சேர்த்து விளக்கப்பட்டுள்ளமை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கிறது.
43 - 51 : அல்லாஹ் வழங்கிய மார்க்க வழியில் வாழுமாறு மனித இனத்துக்கு அழைப்புவிடுப்பதுடன் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை விளக்குகின்றன. அத்தோடு, பாவிகளின் இறுதி முடிவு பற்றியும் இவ் ஆயத்துகள் விளக்குகின்றன.
52 - 54 : மனிதர்கள் மீது செல்வாக்குச் செலுத்த நபியவர்களுக்கிருக்கும் உயர்ந்தபட்ச அளவு பற்றியும் படைப்புகள் மீது அல்லாஹ்வுக்கிருக்கும் அதிகாரம், சக்தி பற்றியும் குறிப்பிடுகின்றன.
58 - 60 : அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் குறித்தான நிராகரிப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி விளக்குவதோடு இறை பாதையில் வரும் சோதனைகளின் போது பொறுமையாக இருக்கும் படி நபியவர்களுக்கு உபதேசம் வழங்கி சூறா நிறைவு பெறுகிறது.
وآخر دعوانا أن الحمد لله رب العالمين..
Comments