சூறதுர் ரூம்
சூறா அர் ரூம் : (நம்பிக்கையை சீர் செய்துகொள்!!)
உலகத்தின் முகம் மீது விழுந்துள்ள வர்ணமான திரைகள் காரணமாக உலகம் பற்றிய வெளித்த தோற்றப் பார்வையும் உலகம் பற்றிய ஒரு மாயையும் மனிதர்களிடையே ஏற்பட்டுவிடுகிறது. இதனால், அவற்றைத் தாண்டி உண்மை முகத்துடன் திகழும் மறுமை வாழ்வின் தோற்றம் எமது கண்களுக்கு மறைந்து போகின்றன.இருப்பினும் எமது அகப் புலன் அதனை உணரத் தவற வேண்டாம் என சூறா அர் ரூம் போதிக்கிறது.
உலகத்தின் அருள்களை அனுபவிக்கும் மனிதன் நன்றி உணர்விழந்து அகம்பாவம்,அத்துமீறல்,மமதை கொண்டலையும் இயல்புகொண்டவனாகிவிடுகிறான். இவ் இயல்பு கண்டு இந்த
சூறா கவலை கொள்கிறது.
சூறா கவலை கொள்கிறது.
மனித வாழ்வோடு தொடர்பான சில யதார்த்தங்களை நினைவுகூறி,மனிதனுக்கு ஒரு மிகப்பெரும் உண்மையை இந்த சூறா சொல்கிறது.
1. வெற்றியும் தோல்வியும் சுழலும் சக்கரம்
2. வாழ்வும் மரணமும்
3. மனைவியும் குடும்ப வாழ்வும்
4. மாறுபட்ட மொழிகளும் படைப்புகளின் வர்ண வித்தியாசங்களும்
5. இரவு இமை தூங்கவும் பகல் வாழ்வுக்கான அருள் தேடவும்
6. மின்னலும் மழையும், நீரேந்தி வளரும் புற்களும் வாழும் தாவரங்களும்
7. வானமும் பூமியும் நிலை பெற்று நேர்த்தியோடு சிம்மாசித்து நிற்பதும்
2. வாழ்வும் மரணமும்
3. மனைவியும் குடும்ப வாழ்வும்
4. மாறுபட்ட மொழிகளும் படைப்புகளின் வர்ண வித்தியாசங்களும்
5. இரவு இமை தூங்கவும் பகல் வாழ்வுக்கான அருள் தேடவும்
6. மின்னலும் மழையும், நீரேந்தி வளரும் புற்களும் வாழும் தாவரங்களும்
7. வானமும் பூமியும் நிலை பெற்று நேர்த்தியோடு சிம்மாசித்து நிற்பதும்
மனிதனின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என சூறா அழைப்புவிடுக்கிறது.
பருவக் காற்றுகள் கால மாற்றத்துக்கேற்ப கருக்கொள்வது போல வெற்றி தோல்விகளும் அவ் விதிக்கமையவே சுழன்றுவருகிறது என வெற்றி தோல்வியின் உண்மைப் பொருளை அல் குர்ஆன் உணர்த்துகிறது.
மனித சிந்தனையைக் கிளறிவிட்டு, எப்போதும் நிலைத்து நிற்கும் மாறா உண்மை ஒன்றை இந்த சூறா முன்வைக்கிறது.
' மனிதன் ஏனைய படைப்புகளுள் ஒரு அங்கம். படைப்புகளை ஆரம்பித்து அவற்றுக்கு முடிவும் மீற்சியும் வழங்கும் ஒரு இறைவன் இருக்கிறான். அல்லாஹ் எனும் பெரும் சக்தி பற்றி அவன் அறிந்துகொள்ள வேண்டும். இறை இருப்பை ஏற்று,பணிவுடன் இறை பணியும் படைப்புகளுக்கான தொண்டும் , தரணியின் எழில் காத்து விருத்தியும் செய்ய வேண்டும்'
இதுவே அல் குர்ஆன் கூறும் மானுட உலகுக்கான செய்தி . இச் செய்தியை மிக அழகான மொழியமைப்புடனும் விடையதானங்களுடனும் முன் வைக்கும் சூறா அர் ரூம் சிந்தனைகளில் பல தூண்டல்களைச் செய்துவிடுகிறது.
இந்த உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை எல்லா மனிதருக்கும் உண்டு. ஆனால், இவ் அறிவைப் பெறுவதற்கான உரிமையையும் அதனை அமுலாக்கம் செய்யும் உரிமையையும் பறிக்கும்,தடுக்கும் உரிமை எந்த மனிதனுக்கும் கிடையாது. இவ் அறிவின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொள்ளும் உரிமை மனிதனுக்கு உண்டு என்பது போலவே, இந்த உரிமையைப் பறிக்கும் உரிமை எவர்க்கும் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டும் அருள் மறை இப் பண்பு கொண்டோரை நிராகரிப்பாளர்கள் (காபிர்கள்) என்று அழைக்கிறது.
படைப்பாளனை அறிந்து பணிந்து நடப்போமாக!
- நவ்ஷாத் பெரோஸ் (நளீமி) -
Comments