சூறதுர் ரூம் தொடர்...
30 வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ள இந்த சூறா (சூறா அர் ரூம்),60 வசனங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை உள்ளடக்கத்தின் அடிப்படையில் வசனக் கூட்டங்களாக நோக்குவோம். 1-7 ( ஆயத்துகள்) : விசுவாசிகளுக்கே வெற்றி நிச்சயம் என அல்லாஹ் வழங்கியிருக்கும் வாக்கு. 8-10 : சிந்தனை செய்யும் படி விடுக்கப்படும் அழைப்பு 11- 32 : பிரபஞ்ச அத்தாட்சிகளை குறிப்பிட்டு பின்வரும் 03 அம்சங்களை விளக்குகிறது. - மீள எழுப்பப்படும் நாள் பற்றி வாக்களிப்பதோடு எழுப்பப்படும் நாட்களில் மனிதர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பது பற்றிய விளக்கம் (11-16) - அல்லாஹ்வின் தூய்மை, அவன் புகழ் ஆகியவற்றை பிரபஞ்ச அத்தாட்சிகளுடன் விளக்குகிறது ( 17-29) - இஸ்லாம் மனித இயல்பில் நிலைகொண்டுள்ள மார்க்கம் என்றும் அல்லாஹ் ஒருவனே எனும் ஓரிறைக் கொள்கையை நினைவூட்டி குழுக்களாக, கொள்கைகளாக பிரிந்துவிட வேண்டாம் என்று மனிதர்களுக்கு உபதேசம் வழங்குகிறது. (30-32) 33 - 37 : இன்ப துன்பத்தின் போது மனித இயல்பு எப்படியிருக்கிறது என்பதை கவலையோடு சித்தரிக்கிறது. 38-39 : உரிமைகளை வழங்குமாறு உற்சாகம் வழங்குவதோடு வட்டிக்கொடுப்பனவு முறையையும் தடுத்து உபத...